திருத்தல வரலாறு

திருமால் தவம் செய்த இடம் எனும் பொருளில் திருமால் தவம் பாக்கம் எனப்பெற்று, தற்போது திருமாதலம்பாக்கம் எனப் பெயர் மருவி அழைக்கப்படுகிறது. திருமாலால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருமாலீஸ்வரர் எனப் போற்றப்படும் இறைவன், அன்னை திரிபுரசுந்தரி சமேதராய், அருளே வடிவாகக் காட்சி தருகிறார். திருமாலுக்கு சூரியகோடி பிரகாசத்தோடு இத்தலத்தில் திருக்காட்சி தந்தமையால் இறைவன் இன்றளவும் பொன்னிறமாக திருக்காட்சி தந்து நம்மையெல்லாம் வசீகரிக்கிறார். மாதவனே மனமொன்றித் தவம் செய்த இடமாகையால் சஞ்சலங்கள் போக்கி மன அமைதியை நல்கும் தலம். நாராயணனும், நமசிவாயமும் ஒருங்கே காட்சி தரும் ஹரிஹர க்‌ஷேத்திரம். திருமாலின் உறைவிடம் திருமகளுக்கும் இருப்பிடம் ஆவதால், திருமகளின் அருளையும் மழையென பொழிவிக்கும் திருத்தலம்.

சிவாலயம்

சோழர்காலத்து கட்டுமானமாய் ஈராயிரம் ஆண்டுகால பாரம்பரியத்தோடு புண்ணிய பூமி காஞ்சிக்கு மிக அருகில் விளங்கும் இந்த சிவாலயம், 25 ஆண்டுகளுக்கு முன்னர் 1996 ல் முதல் குட முழுக்கு கண்டநிலையில், தற்போது ஆலயத்தை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நமது கோவில் திருப்பணி எனப்படும் புனரமைப்பு பணி

ஆலயத் திருப்பணி என்பது ஊர்கூடித் தேரிழுக்கும் பெரும் செயல். பலபிறவிகளில் நாம் செய்த பாவங்களைத் தீர்க்கும் பரிகாரங்களுள் முதன்மையானதாக சொல்லப்படுவது சிவாலயத்தை திருப்பணி செய்து குடமுழுக்கு செய்வித்தல் ஆகும். அதிலும் இது போன்ற தொன்மையான சிவாலயத் திருப்பணி என்பது நமக்கு கிடைத்திருக்கும் மகத்தான வாய்ப்பு. அவன் தாள் வணங்க, அவனே அருள் செய்திருக்கும் இந்த வாய்ப்பினை ஆன்மீக அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களால் இயன்ற நிதி உதவியையும், பொருளுதவியையும், மனதார வழங்கி திருமாலீஸ்வரப் பெருமானின் திருவருளைப் பெற்று மகிழ பக்த மெய்யன்பர்களை பணிவோடு வேண்டுகிறோம்.
    • நடக்க இருக்கும் திருப்பணி விவரம்:-

      • ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி கருங்கல்லால் கட்டுதல்

      • சோழர் காலத்து சப்த மாதாக்கள் பீடம் புனரமைத்தல்

      • கொடிமரம் என்னும் துவதஸ்தம்பம் புதுப்பித்தல்

      • அனைத்து சன்னதிகள் பழுதுபார்த்தல்

      • அனைத்து கோபுரங்கள் பழுதுபார்த்தல்

      • அனைத்து சன்னதிகள் பஞ்ச வர்ணம் பூசுதல்

      • சுவாமி பீடம் புதுப்பித்தல்

      கும்பாபிஷேக விவரம் :-

      • கும்பாபிஷேக யாக சாலை அமைத்தல்.

      • யாக சாலை பொருட்கள்

      • கும்பாபிஷேகத்திற்கு அன்னதானம் வழங்குதல்

      • திருக்கல்யாண உற்சவம்

      • இதர பூஜை பொருட்கள்

      • அன்னதான கூடம் பழுதுபார்த்தல்



    திருப்பணிக்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் கீழ்காணும் வங்கி கணக்கில் அனுப்பலாம்.

    Name of the account :

    SRI THIRUMALEESWARAR HINDU CHARITABLE TRUST

    Account No: 1821115000000457, IFSC : KVBL0001821

    Bank : Karur Vysya Bank, Branch : Perumuchi

    Type of acc : Current

    Gpay / Phonepe : 9894342409

    இங்கனம் : கிராம பொதுமக்கள்

    ஆலயத் திருப்பணி தொடர்பான விவரங்களுக்கு:
    திரு. குமரவேல் 9894342409
    திரு. மணிகண்ட சிவம் 9788770879